Sunday, May 15, 2005

என் அலமாரியிலிருந்து....

தேவதைகளின் காலம் - அழகு நிலா

பல நாட்களுக்கு பின் என் சொந்த ஊரான தஞ்சாவூர்க்கு கடந்த வாரம்
சென்றிருந்தேன். அங்கு நடந்துகொண்டிருந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தபோது இப்புத்தகம் என் கண்ணில் பட்டது. அடிப்படையில் புத்தகத்தின் தலைப்பு மற்றும் அட்டை படத்தினால் ஈர்க்கப்பட்ட நான், பின் இரண்டொரு பக்கங்களை படித்தபின் வாங்கி விட்டேன்.
இனி புத்தகத்தை பற்றி....

கவிதை என்பது யாரும், எதைப்பற்றியும், எப்படியும் எழுதலாம்
என்ற இன்றைய நிலையில் இக்கவிதை தொகுப்பு ஒரு தரமான படைப்பு.
ஆசிரியர் அழகு நிலா. இயற்பெயரா அல்லது புனைபெயரா தெரியவில்லை.
ஆனால் பெயரே கவிதையாக உள்ளது. கவிதைகளும் மிகவும்
சிக்கனமாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.

கவிதைக்காக கருப்பொருளைத் தேடாமல் அன்றடம் வாழ்வில் நடக்கும்
சம்பவங்களையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் கொண்டு
படைத்திருப்பது இத்தொகுப்பின் மற்றுமொரு சிறப்பு. உதாரணமாக,

பசு அறுத்துப் பச்சை இரத்தம்
குடிக்கும் ஆதிவாசியுடன்
நேசம் பாராட்டத் தோன்றுகிறது
பேரிடியாக இங்கு
ஏதாவது நிகழும்போதெல்லாம்.

மேலும் இவரது கவிதைகளில் ஒரு தத்துவார்த்தியின் சிந்தனைகளையும், அதை அடைய முயலும் சாமான்னியன்னின் ஆசைகளையும் ஒருங்கே காணமுடிகிறது. வீட்டிலிருந்து ஆரம்பித்து, பூமி, வானம், அண்டம், பேரண்டம் என இவரது சிந்தனைகள் பரவியிருப்பதை அறியமுடிகிறது.

சட்டென்றுத் தோன்றி மறைந்து
தீர்வாக அப்பிக் கிடக்கும்
மின்னல் இருட்டில்
காலத்தை நிறுத்தி
கதவடைத்த அறைகளுக்குள்
சொற்களின் உச்சமாய்
புரிதலில் என்சியிருக்கும்
இந்த ஆழ்வெளி மெளனம்
விழித்திரையில் படிந்து
மீள மறுக்கிறது.

மனிதவாழ்வு என்பது பலவிதமான விசாரனைகளையும், விவாதங்களையும்
கொண்ட ஒரு தொகுப்பு என்பதை இவரது அழகாக எடுத்து காட்டுகிறது.
ஆண், பெண் உறவுகளை இவர் கையாளும் விதம் அருமை. புத்தகத்தை
முழுவதும் படித்து முடித்த பின்பு, இன்னும் கவிதைகள் இருந்திருக்க கூடாதா என்ற எண்ணம் எற்படுகிறது. அது தான் ஒரு எழுத்தாளளின் வெற்றி என்பதோ!

தலைப்பு: தேவதைகளின் காலம். ஆசிரியர்: அழகு நிலா.
குமரன் பதிப்பகம், சென்னை - 17. விலை: ரூ. 50.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

At 11:08 PM, Anonymous Anonymous said...

நன்றிகள்.

முதல் கவிதை இயல்பாக இருக்கின்றது.

 
At 11:43 PM, Blogger மாயவரத்தான் said...

//எனக்கு பிடித்தவை.....

ஈசனை தொழுதல்,
தமிழ் வளர்த்தல்,
தாடி வளர்த்தல்,
மற்றும்
என்னின் 'அவள்'.//

கடைசி வரி குழப்புதே...!?!

 
At 6:58 PM, Blogger மித்ரா said...

Nanbar mayavarathan avargale,
Can you pls tell me wht leads you for confusion in that sentence?

thanks,
Saikrishna (mitra)

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker