ரஜினி, கமல் மற்றும் விகடன்.....
கடந்த வார விகடனில் நம்பர் 1 கொண்டாட்டமாக ரஜினியின் ஆன்மிக பயணம் மற்றும் கமலின் பேட்டியும் வெளியானது. அதை பற்றிய என் கருத்துக்கள்......
முதலில் நம்பர் 1 இடத்தை பிடித்த விகடனுக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய இந்திய திரையுலகில் தவிர்க்கப்படமுடியாத இருவர் ரஜினி மற்றும் கமல். இந்த இருவரின் பேட்டியும் பல பத்திரிக்கையில் பல தருணங்களில் வெளிவந்திருந்தாலும் இது தான் எனக்குள் பல சிந்தனைகளை தூன்டிவிட்டது.
முதலில் ரஜினியின் ஆன்மிக பயணம் பற்றி.....

ரஜினி ரிஷிகேஷ் செல்வது பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தாலும் இந்த வார விகடன் நமக்கு அவர் செல்லும் இடம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளது. பல கோடி மக்களால் கொண்டாடபடும் நபர் ஒரு பரதேசி போல எந்த ஒரு பகட்டும் இல்லாமல் இருப்பது அவருடைய பக்குவத்தை காட்டுகிறது. வேறு எதையும் விட தெய்விகத்தை அறிவது தான் முக்கியம் என்பது இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. அளவுக்கதிகமான புகழ், பணம் மற்றும் வசதிகள் எல்லாம் சலித்து விடும். ஆனால் தெய்விகம் ஒன்று தான் சலிக்காதது என்பது நமக்கு பாடம்.
அடுத்து கமலின் பேட்டி...
கமலின் 35 வருட பகுத்தறிவு வாழ்க்கைக்கு விருது (ஏ.டி.கோவூர் நேஷனல் அவார்ட்) கிடைத்திருப்பத்ற்கு வாழ்த்துக்கள். தான் ஒரு யதார்த்தவாதி என்பதை இப்பேட்டியின் மூலம் மீண்டும் கமல் காட்டிவிட்டார். தான் தமிழில் பெயர் வைப்பதே ஒரு செய்தியாகி விட்டதாக அவர் கவலைப்பட்டிருப்பது நமக்கும் வேதனை தருகிறது. கெளதமிக்கும்,தனக்கும் உள்ள உறவு பற்றி அவர் கூறியிருக்கும் விதம் அவர் நேர்மையை காட்டுகிறது. தன் மகளின் திருமணம் பற்றியும், பிற மொழி படங்களில் நடிப்பது பற்றியும் அவர் கூறியிருக்கும் விதம் சிறப்பு.
உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் இவர்கள் இருப்பது நமக்கு ஒரு பாடம்.
Photo by: vikatan.com
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad.
12 Comments:
என்னாபா இது தலைவர் 'பித்துக்குளி முருகதாஸ்' மாதிரியில்ல போட்டோவிலே இருக்காரு.
ஆத்திகத்தையும், நாத்திகத்தையும் ஒரு சேரப் பாராட்ட விகடன தவிர யாரால முடியும்?. பின்ன அது நம்பர் ஒண்ணா இல்லாம எப்படி இருக்கும்?.
சாய்,
நன்றாக இருந்தது. ஆனால் பேட்டிகளை பார்த்து எடைபோட முடியாது என்பது என் எண்ணம்.
தேசிகன்.
தேசிகன் சார் கருத்துக்கு மற்றவர்களின் கருத்துக்களை அறிய ஆவல்..
Rajini is a pakka business man. My view is that he is not that much inclined to sprituality and uses that also for his publicity to some extend. why does he take a reporter with him while going to rishikesh??
In that case kamalhassan is somehow better than rajini. He speaks outs everytime frankly.
Regards,
Kathir.
///பேட்டிகளை பார்த்து எடைபோட முடியாது ////
100/100 சரி !! திரையில் நடிப்பவருக்கு .. பத்திரிகையிலும் நன்றாகவே நடிக்கிறார்.. !!
கவுதமியுடன் அவர் சுற்றியதை புகைப்படத்துடன் ஒரு பத்திரிக்கை எழுதிய போது... "என் படுக்கை அறைக்குள் ஏன் எட்டிப்பார்க்கிறார்கள்?" என்று கேட்டவர்.... இவர்..
ரஜினி ஒரு வியாபாரி. கமல் ஒரு நடிகன்( நிஜத்திலும்).
- அன்பழகன்
Kadhal patri ungal ennam...
-
agniVenthdan..
அக்னிவேந்தன்,
காதல் ஒரு இனிமையான இம்சை.
என் கருத்தில் நேர்மையும், தைரியமும் காதலில் முக்கியம்.
With Love,
Mitra(saikrishna)
பி.கு: உங்கள் பெயர்( புனை பெயர்!) நல்லா இருக்கு.
// நேர்மையும், தைரியமும் காதலில் முக்கியம்.//
Well said mitra
- Krish
Nanri nanbaray,
Kadhal varuvatharuku alagum mukkiama?
-
agniVenthdan...
அழகை பார்த்து காதல் வருவதில்லை என்பது என் வாதம்.
அப்படி வருவதற்கு தமிழில் வேறு பெயர் உள்ளது.
Post a Comment
<< Home