Monday, May 30, 2005

இரவில் சூரியன்...

சமுதாய அவலங்களில் என்னை பாதித்த ஒன்று 'பாலியல் தொழில் செய்பவர்கள்'. அவர்களுடைய இந்த நிலைமைக்கு யார் காரணம்? அவர்களேவா அல்லது இந்த சமுதாயமா?

முகம் தெரியாத அவர்களுக்கு இந்த கவிதை சமர்பணம்.


எல்லோருக்கும் இரவில்
உறங்கும் சூரியன்,
எங்களுக்கு மட்டும்
பகலில்.

உயிர்களிடத்தில் அன்பு
காட்டவேண்டுமாம்,
எங்களாலும் முடியும்
மனிதர்களை தவிர
மற்றவைகளிடம்.

வாழத்தான் வேண்டியுள்ளது
ஆறுதல் கூறிகிறேன் என்று,
'அவன் எங்கெல்லாம் தொட்டான்'
என கேட்பவர்களிடையிலும்,
ஆதரவு தருகிறேன் என்று,
அந்தரங்கத்தை தொடுபவர்களிடையிலும்.

விலை மதிப்பில்லாததாம் கற்பு,
கூவாமலும் கூசாமலும் அதைத்தான்
வீதியில் விற்கின்றோம் தினமும்
விலை வைத்து.

காந்தியின் கனவை
நனவாக்க இரவில்
தனியாக நடப்போம்.
என்ன அதிகமாக போனால்,
அன்றைய உழைப்பிற்கு
ஊதியம் இருக்காது.

இறுதியாக என் தாயிடம்
ஒரு விண்ணப்பம்.
'தயவு செய்து என் அப்பன்
யாரென்று சொல்லிவிடு'.
அவனை தெரிந்துகொள்வது,
என்னின் இந்த நிலைமைக்கு
நியாயம் கேட்கவோ,
ஆறுதலாக அவன் தோள்களில்
சாய்ந்துக்கொள்வதற்கோ அல்ல.
என்னுடைய இரவுகளில் அவனை
சந்திக்காமல் இருப்பதற்கு.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

10 Comments:

At 8:40 PM, Blogger வீ. எம் said...

நல்லதொரு கவிதை... மிக ரசித்தேன் (ஆனால் ரசிகர் மன்றம் ஆரம்பிக்க மாட்டேன் !! :) )

என்னை கவர்ந்த்த வரிகள்... !


//இறுதியாக என் தாயிடம்
ஒரு விண்ணப்பம்.
......சாய்ந்துக்கொள்வதற்கோ அல்ல.
என்னுடைய இரவுகளில் அவனை
சந்திக்காமல் இருப்பதற்கு. //

வாழ்த்துக்கள்
வீ .எம்

 
At 9:33 AM, Blogger மித்ரா said...

Dear V.M, Thanks for your comments.

Mitra
(saikrishna)

 
At 10:29 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

// அதை கூசாமல் வாங்கித்தின்னும் நாய்கள் கவலைப்படவில்லையே //
தெருப்பாடக சாருக்கு பக்கவாத்தியம் வாசிக்க ஆசை

 
At 3:56 PM, Blogger Desikan said...

சாய்,

நன்றாக இருந்தது. ஆனால் இது கவிதையா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. கேட்டுவிட்டு சொல்கிறேன்.

 
At 6:40 PM, Blogger கலை said...

மிக நல்லதொரு கவிதை வாசித்த திருப்தி.

"அவன் தோள்களில்
சாய்ந்துக்கொள்வதற்கோ அல்ல.
என்னுடைய இரவுகளில் அவனை
சந்திக்காமல் இருப்பதற்கு"

ஊசியாய் குற்றக் கூடிய வரிகள். வாழ்த்துக்கள்.

இதை எனது 'ரசித்த கவிதைகள்' இல் இணைத்துக் கொள்ளலாம் என இருக்கிறேன்.

 
At 7:47 PM, Blogger மித்ரா said...

Kalai,
NANDRI...

mitra (saikrishna)

 
At 7:49 PM, Blogger மித்ரா said...

Desikan sir,
thanks for your comments.. also let me know your findings.

thanks,
mitra (saikrishna)

 
At 8:06 PM, Anonymous Anonymous said...

//என்ன அதிகமாக போனால்,
அன்றைய உழைப்பிற்கு
ஊதியம் இருக்காது.
//

vaira varigal...

Best wishes...

Sivagami

 
At 8:20 PM, Anonymous Anonymous said...

மிக நல்லதொரு கவிதை வாசித்த திருப்தி.

Priya
Salem,TN

 
At 8:38 PM, Blogger மித்ரா said...

Sivagami, Priya,

Thanks for your comments

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker